- OPS
- டிடீவி
- எடப்பாடி
- கூ
- செல்லப்பா
- அஇஅதிமுக
- டாக்டர்
- சரவணன்
- மதுரை
- சட்டமன்ற உறுப்பினர்
- ராஜன் செல்லாப்பா
- நரசிங்கம்
- சட்டசபை
- பாராளுமன்ற
- கூவும் செல்லப்பா
- தின மலர்
மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நரசிங்கம் பகுதியில், அக்கட்சி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பிரசாரத்தில் பேசியதாவது: சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு பதவி பொறுப்பில் இருக்கும்போது மற்றொரு பதவிக்கு போட்டியிடுவது வீண் செலவினத்தை உண்டாக்கும் என்பதால் அதிமுக அந்த மரபை கடைபிடிப்பதில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி பதவி வகிக்கும்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அவசியம் இல்லை.
பாஜ கூட்டணியில் வெற்றி வாய்ப்பு இல்லை என தெரிந்தே சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஓபிஎஸ் தோல்வி அடைவோம் என தெரிந்தே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் கட்சி மாறி உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏ பதவியை இழக்க உள்ளார். நாவலரே தென்னை மர சின்னத்தில் நின்று படாத பாடுபட்டார். இனி ஓபிஎஸ்சை மக்கள் பலாப்பழம் என அழைக்கப் போகிறார்கள். அப்படி ஒரு ஏளனமான சூழ்நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.
அதிமுக 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியா முழுவதும் சிறு, சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும். வாய்ப்பு ஏற்பட்டால் எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்புண்டு. தேவகவுடா, சந்திரசேகர் எப்படி பிரதமர் ஆனார்களோ, அதுபோல எடப்பாடி பழனிசாமி பிரதமராகலாம். ஓபிஎஸ், டிடிவி தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்காக, நாங்கள் மண்ணை வாரி போட்டுக் கொள்ள முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.
The post ஓபிஎஸ், டிடிவி தலையில் மண்ணை வாரி போட்டுக்கிட்டாங்க…எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு… உச்சி வெயிலில் ஓவராக கூவும் செல்லப்பா… appeared first on Dinakaran.