- ED
- சிபிஐ
- ஐ.டி.
- அதானி
- பதம் தங்கி பழனிசுவாமி
- மோடி
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- கரூர்
- மண்பாறை
- காங்கிரஸ்
- Jyotimani
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூர் மற்றும் மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்ல பெயர் 29 பைசா. 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற பிரதமர் மோடி, தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கல் வைத்தனர். அந்த ஒரு செங்கலையும் நான் எடுத்து வந்து விட்டேன். ஈடி, சிபிஐ, ஐடி, அதானி ஆகியோர் தான் மோடியின் குடும்பம். நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறைகளையும் அதானி கையில் கொடுத்து விட்டார். உலக பணக்கார வரிசையில் 2வது இடத்தில் அதானி இருக்கிறார். அதானி ஏர்போர்ட், அதானி ரயில்வே ஸ்டேஷன், அதானி துறைமுகம், அதானி மின்சாரம் என்று அனைத்தையும் மோடி தூக்கி கொடுத்து விட்டார்.
இதுபற்றி சொன்னால், மோடிக்கு வர வேண்டிய கோபம், பாதம் தாங்கி பழனிசாமிக்கு வருகிறது. நம்முடைய ஒரே லட்சியம் ஒன்றிய, பாசிச பாஜவை பார்சல் செய்து வீட்டுக்கு அனுப்புவோம். இந்த பிரசாரத்தோட பேரு தலைவருடைய குரல் மாநில உரிமைகளை மீட்க வேண்டும். நம்முடைய கொள்கை பற்றி மட்டும் தான் பேசுவேன்.
பாதம் தாங்கி பழனிசாமி அவர்களே உங்கள மாதிரி நான் ஒன்னும் பச்சோந்தி கிடையாது. அடிமைகளுடைய ஓனர் அதாவது எஜமானர்களையும் விரட்டி அடிச்சு ஒட்டு மொத்த இந்தியாவுக்கே விடியலாட்சியை கொடுத்து நம்ம தலைவர் யாரை கை காட்டுறாரோ அவர் தான் ஒன்றிய பிரதமராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
‘மோடி 15 நாள் தங்கினாலும் டெபாசிட் கூட கிடைக்காது’
திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருவானைக்காவல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார். ஆனால் 500, 1000 ரூபாயை தடை செய்து மக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார்.
நம் முதலமைச்சர் தேர்தல் வாக்கிறுதி அளித்ததை நிறைவேற்றினார். ஆனால் மோடி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மோடி இன்னும் 15 நாள் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும், பாஜாவால் டெபாசிட் கூட வாங்க முடியாது. அதிமுகவை வருமான வரி, அமலாக்கத்துறை கொண்டு பயமுறுத்தினார்கள். அதனால் பயந்து அவர்களும் பாஜவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். ஆனால் நம்மை யாரும் பயமுறுத்த முடியாது. நாம் யாருக்கும் அஞ்ச மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஈடி, சிபிஐ, ஐடி, அதானி பற்றி கூறினால் மோடிக்கு வர வேண்டிய கோபம் பாதம் தாங்கி பழனிசாமிக்கு வருது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.