×

அதிமுக தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் டி-சர்ட்டுடன் பங்கேற்ற தொண்டர்

திருவண்ணாமலை: அதிமுக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற தொண்டர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் படத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்து பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதிகளில் ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர் ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ் படத்துடன் கூடிய அதிமுக டி-சர்டை அணிந்து வந்திருந்தார். இதை பார்த்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post அதிமுக தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் டி-சர்ட்டுடன் பங்கேற்ற தொண்டர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,EPS ,Thiruvannamalai ,OPS ,Arani ,Lok Sabha ,Kannamangalam ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...