×

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

பெங்களூரு: கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது சாத்விக் என்ற 2 வயது குழந்தை, மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் en விழுந்தது. தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கினர். சுமார் 15 முதல் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிய நிலையில் 5 அடிக்கு மேல் பாறைகள் இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,Lasayan ,Vijayapura district ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...