- சுல்தான் பத்தேரி
- குடலூர்
- சுல்தான் பத்தேரி
- வயநாடு
- ஸ்ரீநாத்
- முனக்குழி
- சுல்தான் பத்தேரி, வயநாடு மாவட்டம், கேரள மாநிலம்
- தின மலர்
கூடலூர், ஏப். 4: வயநாடு பகுதியில் சுல்தான் பத்தேரி அருகேகிணற்றில் விழுந்து சிக்கி உயிருக்கு பரிதவித்த புலி 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்திரியை அடுத்த மூனாக்குழி பகுதியில் வசிப்பவர் ஸ்ரீநாத் விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை ஒட்டியுள்ள கிணத்தில் இருந்து வீட்டுக்கு தண்ணீர் எடுக்க மின் மோட்டாரை இயக்கியுள்ளார். ஆனால் மின்சாரம் இருந்தும் மோட்டார் இயங்காததால் கிணற்றில் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் உள்ளே சுமார் 20 அடி ஆழத்தில் புலி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கிணற்றில் விழுந்த புலி வெளியேற முயன்றபோது மோட்டாருக்கான மின் இணைப்பு அறுந்துள்ளதையும், கிணற்றுக்குள் புலி உயிருக்கு தவிப்பதையும் பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து, புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிணற்றின் உள்ளே இறங்கி வலையை பயன்படுத்தி 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் புலியை மீட்டனர்.
பின்னர் அந்த புலி குப்பாடி பகுதியில் இருக்கும் விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு பத்திரமாக செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
The post சுல்தான் பத்தேரி அருகே கிணற்றில் விழுந்து உயிருக்கு பரிதவித்த புலி 6 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு appeared first on Dinakaran.