×

மேக்ஸிமம் 2026 வரை நிற்பியா நீ… ஆண் மகனா இருந்தா? நெஞ்சுக்கு நெஞ்சு மோதணும்… நெத்திக்கு நெத்தி முட்டணும்… அண்ணாமலைக்கு சீமான் சவால்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிகட்டு ராஜேஸ்க்கு ஆதரவாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவானைக்காவல் சன்னதி தெருவில் நேற்று முன்தினம் இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்மொழி, இன வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் அண்ணாமலை. ஐபிஎஸ் படித்தவர் போல பேசுவதில்லை. எங்களுக்கு ஏற்கனவே உள்ள சின்னம் இல்லை என்றாலும், எங்கள் கட்சியின் செல்வாக்கை ஜூன் 4ம் தேதி உலக அறியச்செய்வோம். ஆண் மகனா இருந்தா? நேருக்கு நேர், நெஞ்சுக்கு நெஞ்சு மோதணும்டா. நெத்திக்கு நெத்தி முட்டணும்டா, இத்தன கூட்டணி வச்சு ஆண்டுருக்க கொம்பாதி கொம்பன். பெரிய இவரு. பிரதமர் ஓட்டுகேக்குறாரு, எனக்கு எவன்டா ஓட்டு கேட்கிறான். நான்தான்டா, நானே தான். உள்துறை அமைச்சர் வறார், பிரதமர் வறார், எனக்கு எவரும் வரமாட்டார். நான் தான் வருவேன். நீ சரியான வீரனா இருந்தா என்னோட சின்னத்த கொடுத்து நேருக்கு நேர் மோதியிருக்க வேண்டும். சரியான ஆளா இருந்தா மோதியிருக்க வேண்டும். மேக்ஸிமம் 2026வரை நிற்பியா நீ. இவ்வாறு அவர் பேசினார்.

* ஆட்டுகுட்டிய மேய்க்க என்கூடதான் வரணும்…
சீமான் கூறுகையில், ‘ஆட்டுகுட்டிய மேய்க்க நீ என்கூட தான் சேர்ந்து வர வேண்டும். எதோ ஆடுற அதிகார திமிர்ல. வீரனா இருந்தா தனியா வந்து என்னோட கருத்தோட மோது. நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. ஒரு தொலைகாட்சியில நீயும், நானும் பேசுவோம். பாஜ தமிழ்நாட்டுக்கு எதுக்கு. ஒரே ஒரு காரணம் சொல்லு அத நிரூபிச்சுவிடு. நான் என் கட்சியை விட்டு போய்விடுவேன். அதன் பிறகு நாம் தமிழர் கட்சி இல்ல, நாங்க எல்லாம் பாஜவுக்கு வந்துருவோம். ஒரு காரணம் சொல்லு பார்ப்போம். நீ ஐபிஎஸ் படிச்சு எழுதினியா, பாத்து எழுதினியா, என்ன விளையாட்டு காட்டிகிட்டு இருக்க.’ என்றார்.

* தவறை மறைக்க பாஜ மீது பழிபோடுகிறார்: தினம் ஒரு தத்துவ அரசியல் செய்கிறார் சீமான்; சொல்கிறார் அண்ணாமலை
கோவை பூ மார்க்கெட் பகுதியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ‘‘எனது சின்னத்தை திருப்பி கொடுத்துவிட்டு என்னுடன் அண்ணாமலை நேருக்கு நேர் நின்று பாருங்கள். அண்ணாமலைக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால் எனக்கு நானே வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறேன். எனது சின்னத்தை திருப்பி கொடுத்துவிட்டு அண்ணாமலையை நேருக்கு நேர் நிற்க சொல்லுங்கள் என சீமான் திருச்சியில் பேசியுள்ளாரே?’’ என்ற கேட்டபோது, அண்ணாமலை கூறியதாவது: அண்ணன் சீமான் தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்கிற பாணியில் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார். சீமானின் ஸ்லீப்பர்செல் அண்ணாமலை என்று தெரிவித்தார். நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் கமிஷனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு சீமான் போனார். வாதமும் வைத்தார். சீமான் சரியான நேரத்தில் தனது சின்னத்துக்கு ‘அப்ளை’ செய்யாமல், அந்த சின்னம் கிடைக்கவில்லை என்று அவரது தொண்டர்கள் கோபத்தில் உள்ளார்கள்போல. அவர் செய்த தவறை மறைப்பதற்காக தினமும் எங்கள் மீது பழிபோட்டால் எப்படி?. இவ்வாறு கூறினார்.

* இந்தியில் வாக்கு சேகரிப்பு
கோவை பூ மார்க்கெட் பகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தின்போது, வடமாநில மக்கள் மத்தியில் அண்ணாமலை இந்தியில் பேசி வாக்கு சேகரித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீரகேரளம் பகுதியில் அவர் கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது அண்ணாமலை இந்தியில் பேசி வாக்கு சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு இந்தி தெரியாது என்று சொல்லிக்கொண்டு வந்த அண்ணாமலை, தமிழ்நாட்டுக்கு வந்து தேர்தலில் நின்று இந்தியிலும், கன்னடத்திலும் பேசி வருவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழர்களிடையே இந்தியை திணிக்க முயற்சியா? என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

The post மேக்ஸிமம் 2026 வரை நிற்பியா நீ… ஆண் மகனா இருந்தா? நெஞ்சுக்கு நெஞ்சு மோதணும்… நெத்திக்கு நெத்தி முட்டணும்… அண்ணாமலைக்கு சீமான் சவால் appeared first on Dinakaran.

Tags : Nethi ,Seaman ,Annamalai ,AKKADSI CHIEF ,SEEMAN THIRUVANIKKAWAL ,LUNDINAM ,JALLIKATU ,TRICHI ,NAAM ,JALLIKATU RAJESK ,Nenjku ,Nenju Mothana ,Nethi Muttanum ,Ethi ,
× RELATED ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே...