×
Saravana Stores

மரத்தை குத்தகை எடுத்து ஏறி உட்கார்ந்து பறிக்கிறார்கள் பாஜ ஒன்றிய அரசு அல்ல…மக்களோடு ஒன்றாத அரசு… கமல் கடும் விமர்சனம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: உயிரே, உறவே. தமிழே வணக்கம். அவசரம் என்று வரும்போது எல்லாவற்றையும் தாண்டி தோள் உரச வேண்டும். எல்லோரும் இங்கு வந்திருப்பது அவசர நிலையை கருத்தில் கொண்டுதான். எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத்தான். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து விட்டால் ஜனநாயகமே இருக்காது என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள்.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டு காலமாக பகையும், உறவும் மாறிமாறி இருந்திருக்கிறது. அந்த சரித்திரம் படித்தவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் தெரியும். நீங்கள் புதிய சரித்திர கதைகளை கூறாதீர்கள். ஒன்றுமே செய்யவில்லை இந்த ஒன்றிய அரசு என்பதுதான் உண்மை. விவசாய பொருளுக்கு விலை நிர்ணயிக்கவில்லை. இங்கு எத்தனையோ பேர் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். ஒன்றிய அரசின் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை கொடுத்தாலே ஓரளவு குறையும். அதற்கு மாறாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் மக்களின் சொத்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் எல்லாமே நீ வா, போ என்று வருகிறது. அதற்கு நான் என்ன செய்வது.

(அப்போது திருமாவளவன் மைக்கை வாங்கி அதானி, அம்பானி என்று சொன்னார்). ஒன்றிய பாஜ அரசு சமூக நீதிக்கு எதிரான அரசு. சிறுபான்மையினரை அச்சத்தில் வாழ வைக்கின்ற அரசு. மீனவர்களை பாதுகாக்க தவறியது. விவசாயிகளுக்கு துரோகம் செய்வது ஒன்றிய அரசு. பெண்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாத அரசு ஒன்றிய அரசு. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலை இல்லை. ஆனால் ஒன்றிய அரசு என்று சொன்னால் கோபம் வருகிறது. அதனால் மாற்றி சொல்கிறேன். இது ஒன்றிய அரசு அல்ல. மக்களோடு ஒன்றாத அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

The post மரத்தை குத்தகை எடுத்து ஏறி உட்கார்ந்து பறிக்கிறார்கள் பாஜ ஒன்றிய அரசு அல்ல…மக்களோடு ஒன்றாத அரசு… கமல் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Kamal ,Kamal Haasan ,People's Justice Mayyam Party ,Thirumavalavan ,Liberation Tigers of India ,Chidambaram Lok Sabha ,Tamils ,
× RELATED லண்டனில் படிக்கும் எஸ்தர் அனில்