×

சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது!

சென்னை: சி.எஸ்.கே. – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.

மேலும் வே;லியான தகவலில்; ‘டாடா ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை ஏப்ரல் 5, 2024 (வெள்ளிக்கிழமை) முதல் காலை 09:30 மணி முதல் PAYTM மற்றும் www.insider.in மூலம் விற்பனை செய்யப்படும். ஏப்ரல் 8, 2024 அன்று (திங்கட்கிழமை) சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் போட்டி நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kolkata ,IPL ,C. S. KK ,Kolkata Knight Riders ,Chennai Kolkata ,Sepakkam Stadium ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்...