×
Saravana Stores

வயநாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் நான் குரல் கொடுப்பேன் : வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4.37 லட்சம் என்ற இமாலய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி இந்த முறையும் அதே வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜாவும், பாஜ கூட்டணி சார்பில் மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் பேரணியாக சென்று வயநாடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரேணு ராஜ் முன்னிலையில் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கல்பெட்டா புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “வயநாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் நான் குரல் கொடுப்பேன். வயநாட்டில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். கடந்த 5 ஆண்டுகளாக ஒத்துழைப்பு அளித்த வயநாடு மக்களுக்கு நன்றி,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வயநாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் நான் குரல் கொடுப்பேன் : வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Rahul Gandhi ,Thiruvananthapuram ,Wayanad, Kerala ,Kerala ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியில் பிரியங்கா...