மதுரை: ஒரு வாஷிங் மிஷின் போல் பாஜக செயல்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில்; இந்தியா கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலமாசி வீதி முதல் ஓர்க்ஷாப் சாலை வரை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய பழனிவேல் தியாகராஜன்; பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள் ஒன்றிய பாஜக. நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை.
பாஜக வாஷிங் மிஷின் போல் பாஜக செயல்படுகிறது. டெல்லி முதல்வரை சிறையில் அடைக்கிறார்கள், காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி தருவது எல்லாம் தேர்தல் பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல். எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பாஜகவில் இணைந்தால் ஆவியாகிவிடும்இவ்வாறு கூறினார்.
The post பாஜக வாஷிங் மிஷின் போல் செயல்படுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.