பேரம் பேசி, எங்கே அதிகமா இடம் கிடைக்குதோ அங்க தான் ராமதாஸ் கூட்டணி அமைப்பார் என பாமகவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கியுள்ளார். வடசென்னை அதிமுக வேட்பாளரை ஆதரித்து, சென்னை ஓட்டேரி பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
20 ஆயிரம் புஸ்தகத்த படிச்ச அண்ணாமலைக்கு கச்சத்தீவு விவகாரம் என்னான்னு தெரியாதா. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாத்தான் கச்சத்தீவு விவகாரத்தை தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்றது வேடிக்கையா இருக்கு. அதிமுக முதுகுல ஏறி சவாரி செய்றதுக்கு பல பேர் இருக்காங்க. அதிமுகவுக்கு யார் மேலயும் சவாரி ஏறி போகணுன்ற அவசியம் கிடையாது. பாமகவுக்கு எப்படி அங்கீகாரம் கிடைச்சுதுனு வரலாறை திரும்பி பாக்க சொல்லுங்க.
கட்சியை தொடங்குறப்ப ராமதாஸ் என்ன சொன்னார், அவர் குடும்பத்துல இருந்து யாரும் கட்சிப் பொறுப்புக்கு வரமாட்டாங்க, அப்பிடி வந்தா சாட்டையால அடிங்கன்னார். இப்ப என்னா நடக்குது.. மகன், மருமக என்று வரிசையா கட்சியில முக்கியப் பொறுப்புக்கு வந்திருக்காங்க. இதுக்கு பாமக தொண்டர்கள் தான் சாட்டையை சொழட்டணும். ராமதாசை பொறுத்தவரை பேரம் பேசி எங்க அதிகமா கிடைக்குதோ அங்க கூட்டணி வைப்பார். மத்தபடி கொள்கையாவது, வெங்காயமாவது… இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
The post கொள்கையாவது.. வெங்காயமாவது..எங்க பேரம் படியுதோ அங்க கூட்டணி வைப்பார்: ராமதாஸை வெளுத்து வாங்கிய ஜெயக்குமார் appeared first on Dinakaran.