×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவுவைக்க கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்யநாரயண பிரசாத் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25,336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.1,455 கோடியே 20 லட்சம் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டுவிட்டது.

சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார். அரசு தரப்பின் இந்த பதிலை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபர அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Cyclone ,ICourt ,CHENNAI ,Ramdass ,Migjam ,Selvakumar ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...