- டி காக்
- லக்னோ
- பெங்களூரு
- ஐபிஎல் லீக்
- ராயல் சேலஞ்சர்ஸ்
- பெங்களூர்
- லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ்
- எம் சின்னசுவாமி அரங்கம்
- தின மலர்
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோக்கு குயின்டன் டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 53 ரன் சேர்த்தது. ராகுல் 20 ரன் (14 பந்து, 2 சிக்சர்) விளாசி மேக்ஸ்வெல் சுழலில் தாகர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்னில் வெளியேறினார். டி காக் – ஸ்டாய்னிஸ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்க்க, லக்னோ ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஸ்டாய்னிஸ் 24 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டி காக் 81 ரன் (56 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, கடைசி கட்டத்தில் நிகோலஸ் பூரன் சிக்சர் மழை பொழிய, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. பூரன் 40 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். ஆர்சிபி பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 2 விக்கெட் கைப்பற்றினார்.
டாப்லி, யஷ் தயாள், முகமது சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்சுக்கு கோலி அதிரடி துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் சித்தார்த் சுழலில் கோலி சிக்கவே பெங்களூர் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மயன்க் யாதவின் வேகத்தில் கிரீன், மேக்ஸ்வெல், ஒற்றை இலக்கில் நடையை கட்ட 19.4 ஓவரில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூர் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக மயன்க் 3 விக்கேட்டுகளும், நவீன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
The post 81 ரன் விளாசினார் டி காக்; லக்னோ அபார வெற்றி appeared first on Dinakaran.