- வட சென்னை
- பாஜக
- சென்னை
- பாம்
- Tamaka
- அமமுக
- AIADMK தன்னார்வலர்கள் உரிமைகள் மீட்கும் குழு
- பால்கநகராஜ்
- வடசென்னை நாடாளுமன்ற தொகுதி
- வடச்சென்னை
- தின மலர்
சென்னை: பாஜ கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளின் ஆதரவோடு வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜ சார்பில் பால்கனகராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை முறையாக சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது, பிரசாரம் தொடர்பான ஆலோசனை செய்வது, வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது, கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவுகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை. பிரசாரத்துக்கு வரக்கூடிய விவரங்களை கூட வார்டு பகுதி நிர்வாகிகளுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதனால் கூட்டணி கட்சியில் உள்ள பகுதி, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவொற்றியூர் காலடிப்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வேட்பாளர் பால் கனகராஜ் பிரசாரம் செய்தார். அப்போது அமமுக மாநில மீனவரணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் மற்றும் சகாயம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகி கே.கிருஷ்ணன் உள்பட கூட்டணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு வீதிவீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஆனால் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டனர். எனவே, கூட்டத்தை காண்பிக்க பணம் கொடுத்து பெண்களை பிரசாரத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.
குறிப்பாக, சிறுவர், சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் அழைத்து வந்து பாஜ கொடி கம்பை கொடுத்து கால் கடுக்க நடக்க வைத்துள்ளனர். ஒரு சில தாய்மார்கள் தங்களது சிறு குழந்தைகளை கூட இடுப்பில் சுமந்தபடி நீண்ட தூரம் நடந்து சென்றனர். ஏற்கனவே தமிழக அளவில் பெரிய கட்சிகள் ஏதும் பாஜ கூட்டணி இல்லை என்று பரவலாக பேசப்பட்டும், நாாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவார்களா என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் வடசென்னை பாஜ வேட்பாளர் பால்கணகராஜின் செயல்பாடுகளால் பாஜ முக்கிய நிர்வாகிகளே கலக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
The post அறிமுகமும் இல்ல… ஆலோசனையும் இல்ல…வடசென்னை பாஜ வேட்பாளர் மீது கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.