உடுப்பி: கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் மாநாட்டில், 2000 தொண்டர்களுக்கு தயார் செய்த பிரியாணியை, தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் பாஜவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்க உள்ள முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உடுப்பில் தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கான மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக காலை முதல் தொண்டர்கள் ஏராளமானோர் வந்தனர். இதையொட்டி சுமார் 2000 பேர் மதிய உணவு சாப்பிடுவதற்காக பிரியாணி தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில், மதியம் சுமார் 1 மணியளவில் மாநாடு பணிகளை பார்வையிட சென்ற தேர்தல் பறக்கும்படையினர், அங்கு தொண்டர்களுக்காக தயார் செய்த பிரியாணியை அண்டாவோடு பறிமுதல் செய்து தூக்கிச் சென்றனர். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், சாப்பிடுவதற்காக காத்திருந்த நேரத்தில் பிரியாணி வினியோகம் செய்வதற்கு தேர்தல் பறக்கும்படை அனுமதி மறுத்து, பறிமுதல் செய்ததால், தொண்டர்கள் பிரியாணி போச்சே என்று புலம்பியபடி கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல் appeared first on Dinakaran.