×

பாஜ வென்றால் கொடுங்கோல் ஆட்சிதான்: எச்சரிக்கும் சீமான்

தேனி: தேனி பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
டிடிவி தினகரன் நா கூசாமல் பாஜ நல்லாட்சி தந்தாக கூறுகிறார். இவரை டெல்லி வீதியில் போலீசார் இழுத்து சென்றபோதும், இவரது சின்னம்மாவை ஜெயிலில் அடைத்தபோதும் இவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுத்தோம். ஆனால், அவர் பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இவர் எடப்பாடியை துரோகி என கூறுகிறார். தேசிய கட்சிகள் வெற்றி பெற்றால் மொழி, இனத்தை அழித்து விடுவார்கள். பாஜ வெற்றி பெற்றால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என பிரித்து கொடுங்கோல் ஆட்சிதான் தருவார்கள்.

தேனி தொகுதி வேட்பாளர் மதன் டாக்டருக்கு படித்தவர். தேக மருத்துவம் பார்க்க வேண்டியவர், தேசத்திற்கு மருத்துவம் பார்க்க நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு வாக்களியுங்கள். வாக்களிக்காவிட்டால் வேறு எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் வீட்டிலேயே படுத்து தூங்குங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜ வென்றால் கொடுங்கோல் ஆட்சிதான்: எச்சரிக்கும் சீமான் appeared first on Dinakaran.

Tags : BJP ,Seeman ,Theni ,Nam Tamilar Party ,TTV Dhinakaran ,Baja ,Nallakshi Thantaka ,Delhi ,Chinnamma ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்