×

குளங்களை தூர்வாரிய பக்தர்கள்

திருச்செங்கோடு, ஏப்.2: திருச்ெசங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் அமைந்துள்ள கணபதி மற்றும் பாபநாச தீர்த்தகுளம் ஆகிய இரண்டு குளங்கள், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டது. மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் விட்டுச்சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தின் கவர்கள் அகற்றப்பட்டு, தூய்மை பணிகள் நடந்தன. இந்த பணியில் தமிழக அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு, ஈரோடு திருத்தொண்டிசுவரர் உழவாரப்பணி குழு, திருச்செங்கோடு உமையொருபாகன் சிவத்தொண்டர்கள், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை ஆகியவை இணைந்து செயல்பட்டன. சுமார் 250க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு, சேறும் சகதியும் நிறைந்த பாபநாச குளத்தை முழுமையாக தூர்வாரினர். இதையடுத்து குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் விட்டு மீன்கள் விடப்பட்டது. இந்த பணிகளை அறங்காவல் குழு தலைவர் தங்கமுத்து உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

The post குளங்களை தூர்வாரிய பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Theerthakulam ,Ardhanareeswarar hill temple ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்