×

டெல்லி குடியிருப்புப் பகுதியில் நுழைந்த சிறுத்தைப்புலி: மொட்டை மாடியின் மீது ஏறி போக்கு காட்டியதால் பதற்றம்

டெல்லி: டெல்லியில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த சிறுத்தைப்புலியால் பதற்றம் ஏற்பட்டது. வடமேற்கு டெல்லியில் உள்ள ஜகத்பூர் கிராமத்தில் சிறுத்தை புலி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த வீடுகளின் மொட்டை மாடியில் ஏறிய அந்த சிறுத்தை இங்கும், அங்குமாக ஓடி போக்கு காட்டியிருக்கிறது. இதனை கண்டு அங்கிருந்தவர்கள் பதறிக்கொண்டு ஓட்டம் எடுத்துள்ளனர்.

அவர்களை விரட்டி சென்று சிறுத்தை தாக்கியதில் சுமார் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் சிறுத்தை புலியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் உணவு தேடி ஊருக்குள் நுழைந்த சிறுத்தை புலி ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றுக்கட்டில் மூலம் அதனை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

The post டெல்லி குடியிருப்புப் பகுதியில் நுழைந்த சிறுத்தைப்புலி: மொட்டை மாடியின் மீது ஏறி போக்கு காட்டியதால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Leopard ,Delhi ,Jagadpur ,northwest Delhi ,Dinakaran ,
× RELATED அம்பாசமுத்திரம் அருகே ஊருக்குள்...