×

புரசைவாக்கத்தில் திறந்தவெளி வாகனத்தில் தயாநிதி மாறன் பரப்புரை: கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவுக்கு கேள்வி

சென்னை: தேர்தல் பத்திர முறைகேடு, சிஏஜி அறிக்கை உள்ளிட்டவற்றை திசை திருப்பவே கச்சத்தீவு விகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாக திமுக எம்.பி தயாநிதிமாறன் குற்றசாட்டியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தயாநிதி மாறன் புரசைவாக்கத்தில் திறந்தவெளி வாகன பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு தொண்டர்கள் தாரை தப்படையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் அறிவித்த பிறகு தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரும் மோடி சென்னை வெள்ளத்தின் போது வராத ஏன்? என கேள்வி எழுப்பினார். வள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி கொடுக்காதது ஏன் என்றும் அவர் வினவினார். தேர்த்திகள் பத்திரம் முறையீடு, சிஏஜி அறிக்கை உள்ளிட்டவற்றை திசைதிருப்பவே பாஜக கச்ச தீவு குறித்து பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.

மணிப்பூர் கொடுமை, சீனா ஆக்கிரமிப்பு, தேர்தல் பத்திரம் முறைகேடு உள்ளிட்டவற்றை திசைதிருப்பவே கச்சதீவு விவகாரம் பற்றி மோடி பேசி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது எங்கும் கேள்வி படாத வகையில் ப்ரீ பெய்ட், போஸ்ட் பெய்ட் என நூதன முறையில் ஊழல் செய்து வரும் கட்சி பாஜக என்றார்.

ஏன் சேர்ந்தோம், எதற்கு சேர்ந்தோம் என்று தெரியாமலே கூட்டணி இருக்கிறது என்றால் அது பாஜக கூட்டணி தான் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து திருபுவனத்தில் பேசிய அவர் கொள்கை இல்லாமல் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் ரயில்வே கேட் பகுதியில் திறந்த வெளி வாகன பரப்புரை மேற்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றால் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்துவதாக உறுதி அளித்தார்.

The post புரசைவாக்கத்தில் திறந்தவெளி வாகனத்தில் தயாநிதி மாறன் பரப்புரை: கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவுக்கு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Purasaivakam ,BJP ,Kachchathivu ,CHENNAI ,DMK ,Dayanithimaran ,CAG ,Madhya Chennai Constituency ,Purasaivakam.… ,Dinakaran ,
× RELATED கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு...