×

செல்பி படங்களை பார்த்து போடுங்க…மாணவிகளுக்கு சவுமியா ‘அட்வைஸ்’

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, கல்லூரி மாணவிகளிடம் வாக்கு சேகரித்தார். அங்கிருந்த மாணவிகள், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செல்பி குறித்து அட்வைஸ் செய்து வாக்கு ேசகரித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘உங்களது செல்பி படங்களை மற்றவர்களுக்கு அனுப்பும்போது, ஜாக்கிரதையாக இருங்க. அப்பா, அம்மாவிடம் சொல்லுங்க. இப்போது சைபர் கிரைமால் இளம்பெண்கள் அதிகம் பாதிக்கின்றனர்.

இதை எனக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. பொதுநலன் கருதி இதை சொல்கிறேன். எனது ெபாண்ணுங்களுக்கு கொடுக்கும் அட்வைஸ் தான், உங்களுக்கும் கொடுக்கிறேன். உங்கள் படங்களை வக்கிர எண்ணத்தோடு பார்க்கும் நபர்களிடம் சிக்கி சீரழிவதை விட, அதை அப்பா, அம்மாவிடம் சொல்லி அடி வாங்குறது நல்லது தான். எனவே, ஜாக்கிரதையாக இருங்க. யாருக்கும் பயப்படாதீங்க,’’ என்றார்.

The post செல்பி படங்களை பார்த்து போடுங்க…மாணவிகளுக்கு சவுமியா ‘அட்வைஸ்’ appeared first on Dinakaran.

Tags : Soumya ,Sowmiya Anbumani ,BAM ,Dharmapuri ,Selby ,
× RELATED மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சவுமியா அன்புமணி வரவேற்பு