×

சூரியனின் வெப்பம் தாங்காமல் ஆடுகள் புலம்பல்:கோவை மக்கள் பிரியாணி போட தயாராகிவிட்டார்கள்; திமுக ஐ.டி பிரிவு செயலர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

1 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்ச செருப்பிற்கு சமம் என அண்ணாலையின் சர்ச்சை பேச்சுக்கு உங்கள் கருத்து என்ன?  கர்நாடகா சென்றால் கன்னடியன் என்றும், இந்தி தெரியாது என கூறி இந்தி பேசுவது என மாற்றி மாற்றி பேசும் நபர்களுக்கு எல்லாம் ஒன்று தான் கூறமுடியும் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’. தாய்மொழி மீது பற்று இல்லாதவர்கள் மகத்தான போராட்டத்தை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்.

2 கச்சத்தீவை காங்கிரஸ் – திமுக தாரை வார்த்துவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு உங்கள் தரப்பு கருத்து என்ன? 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கச்சத்தீவை மீட்போம் என பாஜக கூறியது. அப்போ, இந்த 10 வருடங்களாக கச்சத்தீவை யோசிக்கவோ, பேசவோ செய்யாதவர்கள் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது கச்சத்தீவின் மீது அக்கறையில் இல்லை; தேர்தலுக்காக தான் என தெளிவாக தெரிகிறது.

இதனையும் தாண்டி, 285 ஏக்கர் கொண்ட கச்சத்தீவை மீட்பது தமிழகத்தின் உரிமை. மேலும், எமர்ஜன்சி காலகட்டத்தில் நம்முடைய மாநில அரசின் ஒப்புதல் வாங்காமல் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். அது செல்லாது என தெள்ளத் தெளிவாக கூறியிருந்த வேளையில், 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உரிமை கிடையாது என கூறியவர்கள். இதனை அன்றைக்கு இருந்த கலைஞர், ஜெயலலிதா போன்றோர் எதிர்த்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இத்தனை வருடகாலம் இல்லாமல் இப்போது கச்சத்தீவை குறித்து பேசுவது அப்பட்டமான, கீழ்த்தரமான நாடகம். மேலும், 285 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கச்சத்தீவு குறித்து பேசும் பாஜக, இந்த 10 ஆண்டுகாலத்தில் இந்தியாவின் சொத்தான 1011 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு தாரை வார்த்துக்கொடுத்த இந்த ஆட்சி தான் தற்போது விழித்துக்கொண்டு கச்சத்தீவை பற்றி பேசுகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கச்சத்தீவு பிரச்னை தீர்க்கப்படும்.

3 அண்ணமாலை சொத்து மதிப்பு குறித்து மாற்றி, மாற்றி பேசி வருவதாகவும், அண்ணாமலை பொய் சொல்வதில் ‘கோயபல்ஸை’ மிஞ்சிவிட்டர் என சமூகவலைதளங்களில் வரும் கருத்து முன்வைக்கப்படுகிறதே. இதை எப்படி பார்க்கிறீர்கள்? இதனால் தான் அவர் பிறக்கும் போதே அண்ணாம(lie)லை என பொய்யில் முடிவது போல அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.

ஏனெனில், சொல்வது எல்லாம் பொய்தான். குறிப்பாக, பல கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஒருவர் தகரடப்பா கொண்டு வந்தேன் என்று கூறினால், மக்கள் ஏழை என நினைக்க மாட்டார்கள் பெரும் கஞ்சனாகத்தான் பார்ப்பார்களே, தவிர கஷ்டப்படுபவர் என பார்க்கமாட்டார்கள். மேலும், பல கோடி சொத்து வைத்துள்ள அண்ணாமலை ஏன் இன்னும் நண்பர்களிடம் கடன் வாங்குகிறார். எனவே, அவரது நண்பர்கள் அண்ணாமலைக்கு கடன் கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

4 தேர்தல் முடிந்தவுடன் கோவை மக்களுக்கு மட்டன் பிரியாணி என கூறினீர்கள். ‘ஆடுகள்’ நிலைமை இப்போது எப்படி உள்ளது?  குளுமையான கோவையில் சூரியனின் வெப்பம் தாங்காமல் 3 டிகிரி, 4 டிகிரி வெயிலின் சூடு தாங்காமல் ஆடுகள் புலம்பி வருகின்றன. அதேபோல், தேர்தல் தொடங்குவதற்கு முன்பு திமுக நண்பர்கள் மட்டன் பிரியாணி போடுவதாக இருந்தது. ஆனால், இப்போது ஒட்டுமொத்த கோவை மக்களே பிரியாணி போட தயராகிவிட்டனர்.

The post சூரியனின் வெப்பம் தாங்காமல் ஆடுகள் புலம்பல்:கோவை மக்கள் பிரியாணி போட தயாராகிவிட்டார்கள்; திமுக ஐ.டி பிரிவு செயலர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,DMK IT Division ,Secretary Minister ,TRP Raja ,Annalai ,Karnataka ,Minister ,DRP ,Raja ,
× RELATED தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி