×
Saravana Stores

மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக மதுபானங்கள் விற்பனையானால், அந்தக் கடைகளில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், விற்பனை செய்யப்பட்ட மதுபான வகைகள், தொகை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு, இரவில் கடை மூடப்பட்ட பிறகு அனுப்பி வந்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மண்டல மேலாளர் அலுவலகத்துக்கும் ஆன்லைன் மூலம் அனுப்பி வருகிறோம். அதில், 52 வகையான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் மதுபானமும், கடந்த ஆண்டு அதே நாளில் விற்பனை செய்யப்பட்ட மதுபான அளவும் ஒப்பிடப்படுகிறது. அதில், 30 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு இருந்தால் எந்தப்பிரச்னையும் இல்லை. அதற்கும் கூடுதலான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் பணியாளரிடம் மண்டல மேலாளர் அலுவலகத்தில் இருந்து விசாரணை நடத்தப்படும். சந்தேகம் ஏற்பட்டால், கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர். இது தவிர, தேர்தல் பறக்கும்படையினரும் அவ்வப்போது கடைக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.

The post மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Chennai ,Lok Sabha ,Tasmak Shops ,Dinakaran ,
× RELATED நெமிலி அருகே நள்ளிரவு துணிகரம்...