×

கெஜ்ரிவாலின் செல்போன் விவரம் சேகரிக்க ஆப்பிள் நிறுவன உதவியை நாடிய ‘ஈடி’

புதுடெல்லி: கெஜ்ரிவாலின் செல்போன் விவரங்களை சேகரிக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்கத்துறை நாடியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வரை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அவருக்கான அமலாக்கத்துறை கஸ்டடி முடிவடைகிறது.

இவ்வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட கோவா ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அமித் பலேகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கெஜ்ரிவாலின் செல்போன் நம்பருக்கு வந்த போன்கால்கள், அதன் உள்ளடக்க விவரங்களை அறிவதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்க துறை நாடியுள்ளது. ஆனால் டேட்டாவை மீட்டெடுக்க பாஸ்வேர்ட் தேவை என்று ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில், கெஜ்ரிவால் தனது ெசல்போன் பாஸ்வேர்டை அமலாக்கத்துறையிடம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கெஜ்ரிவாலின் செல்போன் விவரம் சேகரிக்க ஆப்பிள் நிறுவன உதவியை நாடிய ‘ஈடி’ appeared first on Dinakaran.

Tags : ED ,Apple ,Kejriwal ,New Delhi ,Enforcement ,Enforcement Department ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi ,Edi ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...