×

ஊருக்குள் புகுந்த மான் குட்டி மீட்பு

கெங்கவல்லி, மார்ச் 31: கெங்கவல்லி அருகே கடம்பூர் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஊருக்குள் புகுந்த மான் குட்டியை மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி வனச்சரகம் கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதால், மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கூட்டத்தை விட்டு பிரிந்த 6 மாதமே ஆன ஆண் மான் குட்டி ஒன்று, நேற்று காலை கடம்பூர் கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது, தெருநாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டியதால், ஓட்டம் பிடித்த மான் அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்தது. அதனைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், கெங்கவல்லி வனவர் மற்றும் வனக்காப்பாளர் சம்பவ இடம் விரைந்து சென்று அந்த மானை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அருகில் உள்ள காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.

The post ஊருக்குள் புகுந்த மான் குட்டி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Kadampur forest ,Salem District, ,Kengavalli Forest Reserve ,Dinakaran ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை