×

கடமான் மீது பைக் மீது மோதியதில் வாலிபர் பலி

வால்பாறை, மார்ச் 31: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ஆழியார் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் வால்பாறையை சேர்ந்த மணிகண்ட பிரபு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சின்னார்பதி பழங்குடியினர் கிராமம் அருகே சாலையை கடக்க வந்த கடமான், பைக் மீது மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்ட பிரபு உயிரிழந்தார். இதுதொடர்பாக வனத்துறையினர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் முதற்கட்டமாக அரசு நிவாரண உதவியாக ரூ.50 ஆயிரம் நிதியுதவியை அவரது உறவினரிடம் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி ஆகியோர் வழங்கினர்.

The post கடமான் மீது பைக் மீது மோதியதில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Valparai ,Manikanda Prabhu ,Aliyar ,Valparai Pollachi Road ,Moose ,Chinnarpati ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி டாப்சிலிப்,...