×
Saravana Stores

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

ஐதராபாத்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டது என ஐதராபாத்தில் நடைபெற்ற தனியார் சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள தனியார் சட்டப்பல்கலைக்கழகத்தில் நீதிமன்றங்களும் அரசியலமைப்புன் என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது;
2016-ம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவிகித நோட்டுகல் 500, 1000 நோட்டுகளாக இருந்தன. புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 86 சதவிகிதம் செல்லாது என ஒன்றிய அரசு அறிவித்தது கண்மூடித்தனமானது என கூறிய நீதிபதி, புழக்கத்தில் இருந்த 500, 1000 நோட்டுகளில் 98 சதவிகிதம் திரும்ப வந்துவிட்டதால் கருப்பு பண ஒழிப்பு என்ற இழக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பணமதிப்பிழப்பு பயன்பட்டது; அதன் பிறகு வருமானவரித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை தந்ததாக நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்தார்.

ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும், அண்மைக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடு ஆரோக்கியமானதாக இல்லை என்றும் நீதிபதி நாகரத்னா விமர்சித்தார்.

The post பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா appeared first on Dinakaran.

Tags : Supreme Court Justice ,P. V. Nagaratna ,Hyderabad ,Supreme Court ,Justice ,Private Law University ,Judge ,B. V. Nagaratna ,
× RELATED நடிகை சமந்தா விவகாரம் – அமைச்சருக்கு எச்சரிக்கை