×

பிஞ்சு போன செருப்பு என விமர்சன பேச்சு; இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை

சென்னை: பிஞ்சு போன செருப்பு என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி பிரச்சாரம் செய்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் பாஜ கூட்டணியின் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் போது, அண்ணாமலை பேசுகையில், ‘‘மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல் 1980ல் பேசிய அதையே இப்போதும் பேசுகிறார். இந்தி, சமஸ்கிருதம் இது அது என்கிறார். இன்னும் இந்த பிஞ்சு போன சப்பலை அவர்கள் தூக்கி எறியவில்லை’’ என்றார் ஒட்டுமொத்த தமிழ்நாடும் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா? என அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post பிஞ்சு போன செருப்பு என விமர்சன பேச்சு; இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,CHENNAI ,BAJA ,ANNAMALA ,Bharatiya Khatani ,Tamaga ,Venugopal ,
× RELATED அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய...