கரூர்: கரூரில் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்ற பிரச்சாரத்தில் பெண்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. கரூரில் 2 மணி நேரம் காக்க வைத்துவிட்டு ரூ.50 மட்டும் தந்ததால் அதிமுகவினருடன் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். ஆரத்தி தட்டுடன் காத்திருந்த பெண்களுக்கு அதிமுகவினர் தலா ரூ.50 பணப்பட்டுவாடா செய்தனர்.
The post கரூரில் அதிமுக-வினர் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா!! appeared first on Dinakaran.