×
Saravana Stores

100 நாள் வேலை திட்டத்தால் எந்த பயனும் இல்ல… ஒன்றிய பாஜ அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து என்ன பயன்? சீமான் ஆவேச கேள்வி

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நடந்த பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,‘பணம் இருப்பவர்கள், சமுதாயத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் மட்டுமே அரசியலுக்கும், அதிகாரத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கும் வரை அடித்தட்டு மக்களுக்கான சேவை என்பது கனவாகத்தான் இருக்கும். தமிழினத்தை மிகப்பெரிய இடத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். தமிழினம் பல சாதிகளாக பிளவுப்பட்டு கிடக்கிறது. இதை பயன்படுத்தி பலர் முன்னேறி வருகின்றனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று முழங்கும் பாஜ பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்களை நடத்துகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்துகிறது. ஒன்றியத்தில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டு எதுவுமே செய்யாதவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள். இதை தமிழ் சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டும். இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால் அப்படி கொண்டு வந்திருக்கும் பாஜவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. 100 நாள் வேலை திட்டத்தால் எந்த பயனும் இல்லை. இதனால் உழைப்பு குறைந்து விட்டது,’என்றார்.

The post 100 நாள் வேலை திட்டத்தால் எந்த பயனும் இல்ல… ஒன்றிய பாஜ அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து என்ன பயன்? சீமான் ஆவேச கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Seaman ,Kadayanallur Manikoondu ,Tenkasi ,Naam Tamilar Party ,chief coordinator ,Seeman ,Dinakaran ,
× RELATED மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும்...