கரூர், மார்ச் 29: கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி வாய்க்காலில் மண்டி கிடக்கும் புல், பூண்டுகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி விவரம் வருமாறு அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் முக்கியமான முக்கிய வாய்க்கால்களில் ராஜ வாய்க்கால் முதன்மையானதாகும். இப்பகுதியில் இருந்து கரூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெல், கரும்பு, வாழை, கோரைப்புல் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது மழைக்காலம் நிறைவு பெற்றுள்ளது. பாசன வாய்க்கால் பகுதிகளில் ஓரளவு நீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாய்க்கால்களின் உள்பகுதியில் ஆகாய தாமரை, கருவேல முட்செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய சாக்கு வீடுகளில் கொட்டப்படும் கழிவுகள் வாய்க்கால்களை அடைத்து தண்ணீர் செல்ல முடியாதபடி காணப்படுகிறது.
தற்போது வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதால் எனது சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்லது விவசாய அமைப்புகள் வாய்க்கால்களில் தண்ணீர் முறையாக செல்ல முடியாமல் தடுக்கும் ஆகாயத்தாமரை மற்றும் பிற கழிவுகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கரூர் ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.