ஊட்டி, மார்ச் 29: குன்னூரில் ராணுவ வீரர் மற்றும் ராணுவ வீராங்கனைகள் அசத்திய குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் வெலிங்டன் ராணுவ மைய பகுதிகளில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி உயர் அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாக குதிரை சவாரி ஜிம்கானாவில் நடத்தப்பட்டு வருகிறது. குன்னூரில் மவுன்டன் ஜிம்கானா என் பெயரில் 50க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு குதிரை சாகச நிகழச்சி நடைபெற்றது.
இதில் குதிரைகளுக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, 4 ஜம்பிங், ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் துள்ளி சீறி பாய்ந்து போட்டி போட்டுக்கொண்டு முந்தி சென்ற குதிரைகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
பின்பு நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில், நெருப்பு வளையம் மற்றும் நிறுத்தி வைக்கபட்ட வாகனங்களான ஜீப் மற்றும் மோட்டர் சைக்கள் மீது பாய்ந்து குதிரைகள் அசத்தியது. குதிரையில் இருந்தே ஈட்டி எறியும் போட்டிகளும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீரங்கனைக்கு ராணுவ பயிற்சி கமாண்டன் லெப்டன் ஜென்ரல் வீரேந்திர வாட்ஸ் கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்.
The post குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல் appeared first on Dinakaran.