×

எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

நாமக்கல், மார்ச் 29: குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி, தன்னாட்சியின் சர்க்யூட் கிளைகள், எக்ஸல் பிசினஸ் ஸ்கூல் மற்றும் எக்ஸல் காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ஆகியவற்றின் 17வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மதன்கார்த்திக் வரவேற்றார். எக்ஸல் பொறியியல் கல்லூரி முதல்வர் பொம்மண்ண ராஜா, எக்ஸல் தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர் எக்ஸல் குழும நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம் கலந்துகொண்டு முக்கியத்துவத்தை பற்றியும், வெற்றி அடையும் வரை செய் என பேசினார். இதில் மல்டிகோார் வெர் இன்கார்பரேட், நிறுவன தலைமை மனிதவள அதிகாரி சசிகாந்த் ஜெயராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஸ்ரீ ரியோ ராஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் மாணவர்களுடன் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். விழாவின் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களால் கல்வி மற்றும் கல்வி சாரா விருதுகள் வழங்கப்பட்டன. கல்வியியல் இயக்குனர் கார்த்திகேயினி நன்றி கூறினார்.

The post எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Excel College ,Namakkal ,Kumarapalayam Excel College of Engineering ,Circuit Branches of Autonomy ,Excel Business School ,Excel College of Architecture ,Madankarthik ,Vice President ,Excel Educational Institutions ,Excel ,Engineering College ,Dinakaran ,
× RELATED ஐஇஐ மாணவர்களின் அத்தியாயத்தின் தொடக்க விழா