திருவள்ளூர்: மது பாட்டில்களை மொத்த விற்பனை செய்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர். திருவள்ளூர் நகராட்சி, சி.வி.நாயுடு சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 9045ல் பணியாளர்கள் மொத்த விற்பனையில் ஈடுபட்டுவருவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ச.விசாகன் உத்திரவின் பேரில், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.பன்னீர் செல்வம் அறிவுரைகளின் படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சி.கே.செந்தில்குமார் திருவள்ளூர் நகராட்சி, சி.வி.நாயுடு சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 9045 ல் திடீரென சோதனை செய்தனர். அப்போது அந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து மொத்த விற்பனையில் ஈடுப்பட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் என நான்கு பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
The post மது பாட்டில்களை மொத்த விற்பனை செய்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: மாவட்ட மேலாளர் நடவடிக்கை appeared first on Dinakaran.