×
Saravana Stores

வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்ல அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது: தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி

சென்னை: வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்ல அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது என மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நின்ற வயதான பாட்டி ஒருவர், நீதான் ராஜா ஜெய்ப்ப, அந்த ஆண்டவர் உங்கள குறை இல்லாமல் பார்த்து கொள்வார். தம்பி நீங்க எம்.ஜி.ஆர் போல இருக்கீங்க, வெற்றி உங்களுக்கு தான் என வாழ்த்தினார். அவருக்கு மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் சால்வை அணிவித்து செல்லமாக கன்னத்தை கிள்ளிவிட்டு ஆசிர்வாதம் வாங்கினார். மேலும், அங்கு கூடியிருந்த பெண்களுக்கு அதிமுக செய்த திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.

பின்னர்,அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வேளச்சேரி தொகுதியில்,விஜயநகர பேருந்து நிறுத்தத்தில் மேம்பாலம் அமைத்து கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைத்தது அதிமுக அரசு. 2004ம் ஆண்டில் வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்வதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். மீண்டும் அதிமுக அரசு 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர்,வேளச்சேரியில் இருந்து விஜயநகர பேருந்து நிலையம் வழியாக தரமணி சாலை வழியாக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு உபரிநீர் செல்ல வழி வகுத்தார். அதேபோல், தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அங்கு மாணவர்களுக்கு விடுதி, ஆய்வுக்கூடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

The post வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்ல அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது: தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Lake Velachery ,Buckingham Canal ,Densene ,Jayawardhan ,Chennai ,Lake Velacheri ,Dr. ,J. Jayawarden ,King Jaippa ,Lord ,Lake Valacheri ,Tensene ,
× RELATED சட்ட விரோதமாக மழைநீர் கால்வாயில்...