சென்னை: எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் கூட்டணி பலத்தில் தங்களுக்கான சின்னத்தை எளிதாக பெற்ற கட்சிகளும் பிரச்சாரத்தில் தடுமாறுவது வாக்காளர்களிடம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக மாங்காட்டில் பிரச்சாரம் செய்த அக்கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் அந்த நாள் நினைவில் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசும் போது, வாட்குகேட்கும் போது மக்கள் பழைய நியாபகத்தில் பேசுவதாக கூறினார். தேனியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆண்டிபட்டி அருகே மரவப்பட்டியில் வாக்கு சேகரித்த போது இரட்டை இலை சின்னம் துரோகியிடம் உள்ளதாக கூறினார். கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னால் அமைச்சர் சி.வி.சண்முகம் சின்னத்தை மாற்றி கூறினார். சமாளித்து கொண்டு பேசிய சி.வி.சண்முகம் பின்னர் தேமுதிக வேட்பாளர்களின் சின்னம் முரசு என சரியாக சொல்லி வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
The post சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு சேகரிக்கும் தலைவர்களால் சிரிப்பலை: த.மா.கா. வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.