×

நாகர்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பரப்புரை: 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என நம்பிக்கை

நாகர்கோவில்: அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்தால் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முடங்கும் அளவிற்கு குரல் எழுப்புவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

டீசல் விலை உயர்வை விலை வாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு குரல் எழுப்புவோம் என தெரிவித்தார். அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட வேட்பாளராக போட்டியிட முடியும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பற்றி வாயை திறக்கவில்லை. இறுதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

The post நாகர்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பரப்புரை: 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Palanisamy Paparpurai ,Secretary General ,Nagarkovo ,Supreme Coalition ,Nagarko ,Ackatsi ,Edapadi Palanisami ,Nagarkov ,Kanyakumari ,Parliamentary ,Basaliyan Nazareth Vlavango ,Supreme Secretary ,Palanisami Prappurai ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்தபடி போதைப்பொருள்...