×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 28: உப்பூர் அருகே கண்மாய் தண்ணீரில் சிறுவன் மூழ்கி பலியானது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். உப்பூர் அருகே மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் அழகர். இவருக்கு இரண்டு மகன்கள். இவரது மூத்த மகன் அபிசன்(14) உப்பூரில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மோர்பண்ணையில் உள்ள கண்மாயில் சகோதரருடன் குளிக்க சென்றவர், திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். அப்போது அங்கே குளிக்க வந்த அதே ஊரைச் சேர்ந்த மதி என்பவர் அபிசனை உடனே மீட்டு திருப்பாலைக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றார். பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Kanmai ,Uppur ,Alaghar ,Morpannai ,Abhisan ,
× RELATED நாகனேந்தல் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை