×

தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்

சேந்தமங்கலம், மார்ச் 28: கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷனில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கொல்லிமலை ஒன்றியம், வாழவந்திநாடு ஊராட்சி, செம்மேடு போலீஸ் ஸ்டேஷனில், தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம் எஸ்ஐ தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில், அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

சுவர்களில் சின்னம் வரைதல், பிளக்ஸ் பேனர் வைத்தல், பிரசார ஒலிபெருக்கி வைத்தல், விளம்பர வாகனத்தில் கிராம பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளில், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முக்கிய இடங்களில் முக்கிய பிரமுகர்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தால், தேர்தல் அலுவலரின் அனுமதி பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

The post தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kollimalai Vazhavantinadu Police Station ,SI ,Thiagarajan ,Semmedu ,Police Station ,Kollimalai Union ,Vazhavantinadu Panchayat ,DMK ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்