×

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹52.68 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் தகவல்

வேலூர், மார்ச் 28: வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் வாகன சோதனைகளில் நேற்று வரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹52.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 குழுக்கள் என 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு 15 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ₹52 லட்சத்து 68 ஆயிரத்து 980ஐ பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், ₹40 ஆயிரத்து 330 மதிப்பில் மதுபாட்டில்களும், ₹4 லட்சத்து 41 ஆயிரத்து 945 மதிப்பில் பட்டு சேலைகளும், 634 சுடிதார் ஆடைகளும் பறக்கும் படை குழு மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மேல்முறையீட்டு குழுவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த காரணத்தினால் ₹19 லட்சத்து 48 ஆயிரத்து 200 பணம் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹52.68 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Flying Squad ,Status Vigilance Teams ,Dinakaran ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...