- திருச்சி நாடாளுமன்றத் தொகுதி
- அஇஅதிமுக
- கரம்பாக்குடி
- புதுக்கோட்டை
- மாவட்டம்
- திருச்சி பாராளுமன்றம்
- தொகுதியில்
- திருச்சி அதிமுக மாவட்ட அலுவலகம்
- முன்னாள் அமைச்சர்
- Vijayabaskar
- கருப்பையா
- திருச்சி
கறம்பக்குடி,மார்ச் 27: புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். இதில் திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, தனக்கு அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தர வேண்டும்.
பொதுமக்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் குக்கர் விசில் அடிக்காது. இரட்டை இலை துளிர்வது உறுதி என்றார். கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.