×

வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

 

நாகப்பட்டினம்,மார்ச்27: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தேர்தல் தேதி கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்டு 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் 22ம் தேதி வரை ஒரு வேட்பாளர்கள் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம்(25ம் தேதி) பிரதான கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதன்படி 5 வேட்பாளர்கள் 11 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று(26ம் தேதி) சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பங்கிற்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து இரண்டாம் முறையாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாகப்பட்டினம் நர்டாளுமன்ற தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர்களை தவிர யாரும் போட்டியிட சுயேட்சைகள் போட்டியிட மாட்டார்கள் என வாக்காளர்கள் பேசி வந்தனர். ஆனால் சுயேட்சைகளும் போட்டியிடுவர்கள் என்பதை நிருபிக்கும் வகையில் நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று(27ம் தேதி) மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நாள் நிறைவு பெறுகிறது.

The post வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Kilvellur ,Vedaranyam ,Tiruvarur ,Tirutharapoondi ,Nannilam ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...