×

முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் தேரோட்டம்

பரமக்குடி,மார்ச் 27: பரமக்குடி நகரின் காவல் தெய்வமான முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி திருவிழா மார்ச் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச்சட்டி வைபவம் வெகுவிமர்சையாக நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை முதல் திரளான பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் 21 சட்டி, 51 சட்டி உள்பட பல்வேறு எண்ணிக்கையிலான சட்டிகள், வேல்குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனுக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டு கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Muthalamman temple ,Panguni festival ,Paramakkudi ,Panguni ,Muthala Parameshwari Amman Temple ,Agnichatti Vaibhavam… ,Muthalamman Temple Panguni Festival Chariot ,Dinakaran ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா