×

பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 சீன பொறியாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். சுமார் ரூ.5 லட்சம் கோடி செலவில் சீனா, பாகிஸ்தானில் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் பல்வேறு கட்டமைப்பு பணிகளை சீனா செய்து வருகிறது. அவற்றில் ஆயிரக்கணக்கான சீன பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தாசு நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள சீன பொறியாளர்கள் உள்ளிட்ட பணியார்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து கோஹிஸ்தான் நோக்கி நேற்று பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வந்த பஸ் ஷங்லா மாவட்டத்தின் பிஷாம் பகுதியில் வந்த போது எதிர் திசையில் வெடிகுண்டு நிரப்பிய வாகனம் மோதியது. இதில் வெடித்து சிதறிய பஸ்சில் 5 சீன பொறியாளர்கள், பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் ஒருவர் பலியாகினர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Khyber Pakhtunkhwa ,China, Pakistan ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் சவுதி விமானம்...