×

தஞ்சாவூர் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டருக்கு வலை

தஞ்சாவூர், மார்ச் 26: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டு தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. பின்னர் ஐந்து நிமிடம் கழித்து புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று அரசு பஸ்சை பின் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் முன்னே சென்ற அரசு பஸ் மில்லு முக்கம் மற்றும் பாப்பாநாடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது பின் தொடர்ந்து வந்த தனியார் பஸ் டிரைவரும், கண்டக்டரும் புலவன்காடு என்ற இடத்தில் அரசு பஸ் டிவைரை அசிங்கமாக திட்டி விட்டு பஸ்சை எடுத்துக் கொண்டு சென்றனர். அரசு பஸ் டிரைவர் சைடு கொடுக்காமல் சென்றதால் ஆத்திரத்தில் இருந்த தனியார் பஸ் டிரைவர் மணிகண்டன்(30), கண்டக்டர் சசிகுமார் ஆகிய இருவரும் தஞ்சை தெம்மங் குடிசை பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு பஸ் கண்டக்டர் மாரியப்பன்(40) அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் மாரியப்பனை பஸ்சில் இருந்து கீழே இறக்கி நடுரோட்டில் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் மணிகண்டன் மற்றும் கண்டக்டர் சசிகுமார் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர். அரசு பஸ் கண்டக்டரை நடுரோட்டில் தாக்கிய சம்பவம் தஞ்சையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தஞ்சாவூர் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Pattukottai ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி...