×

பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

சாத்தான்குளம், ஜூன் 14: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு மகன் தினேஷ்குமார் (29). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தினேஷ்குமார், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

The post பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Satankulam court ,Suyambu ,Dinesh Kumar ,Bandarapuram ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்