×

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து!

புதுக்கோட்டை: அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பாத்திரக்கடை செயல்பட்டு வருகிறது. அதில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ மளமளவென பற்றி எரிந்ததால் மேலும் அருகிலுள்ள ஆவுடையார் கோவில், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து தீயை அணைத்து வருகின்றனர்.

பாத்திரக்கடை அருகில் உள்ள நகை கடையிலும் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்படுகிறது. பண்டிகை காலம், பங்குனி உத்திரம் என்பதால் அப்பகுதியை பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

The post அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Arantangi bus station ,Pudukkottai ,District ,Pudukkottai Bus Station ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...