×

போர்வெல் பம்புகளை சீர்செய்யும் பணி தீவிரம்

 

தர்மபுரி, மார்ச் 25: கோடை காலம் தொடங்கியதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் பழுதான போர்வெல் பம்புகள் சீர்செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 10 பேரூராட்சி, 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ஒரு கிராமத்திற்கு ஒரு போர்வெல் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பம்புகள் பெரும்பாலும் நீரோட்டம் கொண்ட கால்வாய், ஏரி கரையோரங்களில் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் நடப்பாண்டு போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், அடி பம்புகளில் தண்ணீருக்கு பதிலாக காற்று தான் வருகிறது. தற்போது, வெயில் கொளுத்தி வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது. இதையடுத்து, போர்வெல் பம்புகளை ஆழப்படுத்தி, கூடுதலாக போர்வெல் போடப்பட்டு வருகிறது.

தடங்கம் ஊராட்சி பெருமாள்மேடு பகுதி மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி கூடுதலாக போர்வெல் பம்புகள் அமைக்கப்பட்டது. இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரகணக்கான போர்வெல் பம்புகள் உள்ளன. இவற்றில் தண்ணீர் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பயன்படுத்துவதால், பல பகுதிகளில் போர்வெல்கள் பழுதடைந்துள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில், நிலத்தடி நீர் கீழே சென்று விட்டது. இதனால், தண்ணீர் வருவதில்லை. கோடை காலத்தை சமாளிக்க பழுதடைந்த போர்வெல் பம்புகளை சீரக்கப்பட்டு வருகின்றன,’ என்றனர்.

The post போர்வெல் பம்புகளை சீர்செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே வாலிபர் சடலம் மீட்பு கொலையா? என விசாரணை