உடுமலை, மார்ச் 25: தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில், தளியில் உள்ள தென்னை மகத்துவ மையத்தில் தென்னை சாகுபடி உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் மதிப்பு கூட்டல் பற்றி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை வேளாண் வணிக மேலாண்மை 4ம் ஆண்டு மாணவர்களுக்கு கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டது.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவி இயக்குனர் ரகோத்தமன் தளி மகத்துவ மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், சாதனை கள் மற்றும் தென்னை தொழில்நுட்ப இயக்கத் தின் மூலமாக தென்னை சார்ந்த தொழில்முனை வோருக்கான திட்டங்கள் குறித்து தெளிவாக விளக்கினார்.
மேலும், சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாடு அளவில் தென்னை பயிரின் இன்றைய நிலை, தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, அறுவடை பின்செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். அனைத்து தென்னை உயர்சாகுபடி தொழில் நுட்பங்களும் செயல்முறை விளக்கம் செய்தும் காண்பிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் தென்னை மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள், தென்னை உயிர்உரங்கள், ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிகொல்லிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி கண்காட்சியில் வைக்கப்பட்டு விளக்கி கூறப்பட்டது.
The post வேளாண் மாணவர்களுக்கு தென்னை மதிப்பு கூட்டல் பயிற்சி appeared first on Dinakaran.