×

பங்குனி திருவிழாவில் குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம்

 

கமுதி, மார்ச் 25: கமுதி முத்துமாரியம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கமுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்களிலும் ஆயிரக்கணக்கானோர் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். கோவிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் சுண்டல் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

பூஜைக்கு பின்பு தினந்தோறும் இரவு அம்மன் காமதேனு, பூதவாகனம், ரிஷபம், மயில், குதிரை, யானை உட்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 10ம் நாள் திருவிழாவில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர் முழுவதும் ஆங்காங்கே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் காப்பு வழங்கப்பட்டது. இதனை பக்தர்கள் தாங்கள் கட்டியுள்ள உடையில் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டனர். நாளை பொங்கல் திருவிழாவில், கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.நாளை மறுநாள் அக்னி சட்டி திருவிழா நடைபெற உள்ளது.

The post பங்குனி திருவிழாவில் குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம் appeared first on Dinakaran.

Tags : Amman Nagar ,Panguni festival ,Kamudi ,Kamudi Muthumariamman ,Panguni Pongal festival ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா