×

முன்னாள் அமைச்சர் காலமானார்

 

சென்னை, மார்ச் 25: திமுக முன்னாள் அமைச்சர் ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (76). இவர், அச்சிறுப்பாக்கம் சட்டமன்ற தனித் தொகுதியில் திமுக சார்பில் கடந்த 1989ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து அக்கட்சி சார்பில் அச்சிறுப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பின்னர், உடல்நிலை குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவால் ராமகிருஷ்ணன் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த கிராமமான மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

The post முன்னாள் அமைச்சர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : minister ,Chennai ,Former ,DMK ,Ramakrishnan ,Perumbakkam ,Madhurantagam ,Chengalpattu district ,Achirpakkam ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்